'சந்திரமுகி' படத்திற்கு பின் ஒரு பழங்கால வரலாறு - சுவாரஸ்ய தகவல்கள்

Tuesday, 21 Jul, 7.11 pm

கேரளாவில் ஆலப்புழா மாவட்டம்..

நங்கியார்குளங்கரா-மாவேலிக்கரா ரூட்டில் இருக்கிறது முட்டம் என்கிற ஊர்….

‘ஆளும்மூட்டில் மேட’ என்றழைக்கப்படும் ஒரு தறவாட்டு மாளிகை அங்கு இருக்கிறது. பொதுவாக பணக்கார தறவாடென்றால் நாயர், நம்பூதிரிகள் தான் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள்..

இந்த தறவாடு கேரளாவின் பிற்படுத்தப்பட்ட ஜாதி என சொல்லப்படும் ஈழவ சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெரியமனிதரின் மாளிகை…திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் இந்த பெரியமனிதரை ‘சாண்ணான்’ என்கிற பட்டம் கொடுத்து ராஜாவின் பூரண அன்புடன் விளங்கியவர். தீண்டாமை கொடுமையாக விளங்கிய காலகட்டம்…

அந்தக்காலத்தில் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் நான்கோ ஐந்தோ கார்கள் தான் இருந்தன.